பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 சக் என் கின்ற உண்மைப் பொருளை அறிவிக்கின்ற மார்க்கம் என்று சுவாமிகள் விளக்கியுள்ளார். ஆண்டவனே இயற்கையுண்மை என் கி ன் ற சத்தியத் திருவுருவினன் என்றும், ' என் மார்க்கம் இறப்பொழிக்குஞ் சன் மார்க்கந்தானே ' என்றுங் கூறியுள் ளார். ஆண்டவனது திருவருளேப் பெறுவதற்குச் சன் மார்க்கமே தக்க நெறி என்று தாயுமான அடி களும் குறிப்பிடுகின் ருர்கள். அந்தோ வீ ததிசயமிச் சமயம் போலின் றறிஞரெல்லா நடுவறிய வணிமா வாதி வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம் வைத்திருந்த மாதவர்க்கு மற்று மற்றும் இந்திராதி போகநலம் பெற்ற பேர்க்கும் இதுவன்றித் தாயகம்வே றில்லை யில்லை சந்தான கற்பகம்போ லருளைக் காட்டத் தக்கநெறி இந்நெறியே தான்சன் மார்க்கம் -ஆகாரபுவனம்-சிதம்பர இரகசியம் 11 ஆன்மலாபம் உலகத்தில் உயர்பிறப்பாகிய மனிதப் பிறப் பைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினுல் அடையத்தக்க தலைப்பட்ட ஆன்ம இன்ப சுகத் தைக் காலமுள்ள பொழுதே விரைந்து அறிந்து அடையவேண்டும். இந்த ஆன்ம இன்ப வாழ்வு மூன்றுவகைப்படும். அவை இம்மையின்ப வாழ்வு, மறுமையின்ப வாழ்வு, பேரின்ப வாழ்வு எனப்படும். இம்மையின்ப வாழ்வு சிறிய தேக கரணங்களைப்