பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 பெருமான் காரணமென்னவென்று வினவினர். * அண்ணன் விருப்பத்திற்கு ஏற்பக் கல்விகற்று வீட்டிலேயே தங்கியிருந்தால் எல்லோருடன் நுமக் குரிய பங்கை உ ரி ய க | ல த் தி ல் சுவையுடன் உண் ணலாமே ; இப்போது ஆறியசோற்றை அச்சத்துடன் புசிக்கக் கண்டு மனம் புழுங்கு கின்றேன் ” என்றனர். அண்ணனுடைய அதி காரத்திற்குக் கட்டுப்படாத இளையபிள்ளையார் அண்ணிையின் அன்பிற்கு உட்பட்டுத் “ தங்கள் விருப்பமென்ன ? ' என்று கேட்டார். நுமது அண்ணன் சொற்படி வீட்டிலிருந்து ஒழுங்காகக் கல்வி பயிலவேண்டும் ' என்றனர். ஆண்டவன் ‘' அருள் தந்து இருக்கும் நேரம் வந்துவிட்டது. அண்ணனியார் அன்று சி ந் தி ய புறவமுதக் கண்ணிர்த் துளிகள் ஒவ்வொன்றும் செம்பொன் கோடிபெறும். அண்ணியார் உகுத்த கண்ணிர் அவரது நெஞ்சைச் சுட்டது. அக்கண்ணிருக்கு ஈடுகட்டி நம்பெருமான் கார்பூத்த கனமழை போற் கண்களின் நீர் சொரிந்து கனிந்து மிகப்பாடு கின்ற ’’ காலந்தொடங்கிவிட்டது. அதல்ை இணங்கிய இளையபிள்ளையார் தமக்குக் தனியிட மும், திருவிளக்கும், கண்ணுடியும் தருமாறு வேண்டினர். அண்ணியார் தமது கணவரிடம் நிகழ்ந்தனவற்றைக் கூற அவரும் தம்பியின் மன மாற்றங்கண்டு மகிழ்ந்து வீட்டின் மாடியில் ஒர் அறையை ஒழித்துக்கொடுத்து அவர் வேண்டிய வண்ணம் திருவிளக்கும், கண்ணுடியுங் கொடுத்து உதவினர். இளே யபெருமானுக்கு அப்போது ஒன்பது வயதாயிற்று. சென்னையில் ஏழு கிணற்.