பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 வளிரவாகியும் ஒரு பாடலேனும் முடிந்திலது. செவி மடுத்த அன்பரெல்லாம் இளையபிள்ளேயே புராணம் முழுவதையும் சொல்லவேண்டுமென்று வேண்டி னர். இவ்வாருகச் சொற்பொழிவு நிகழுங்கால், சபா பதிப் பிள்ளையிடம் அவரது நண்பர் ஒருவர், " உன் தம்பி கல்விபயிலாது திரிகின்ருன் என்று ஒதுக்கி வைத்தாயே, வந்து உண்மை கண்டு அறிவாய்” என்றுகூறி அ வ ைர அழைத்துவந்து ஒருபுற மிருக்கச்செய்து உண்மை அறியச் செய்தார். தம்பி யின் நாவன்மையையும், அறிவின் ஆழத்தையும் உரையினுடே கலந்து இனிக்கும் அருட்டன்மை யையும் நேரில் கண்டறிந்த அண்ணன், என்ன தவறு செய்தோம்” என்று மனம் வருந்தி மனைவி யிடம் போய் இதுவரையில் தம்பி என்றிருந்தேன்: இனித் தம்பியல்ல; அம் முருகக்கடவுளே தான் ! நாம் பெற்ற பேறு என்னே !’ என்று தம்பியின் அருமையைக் கூறி அன்றுமுதல் பேரன்புடன் அவரைப் பாராட்டிவருவாராயினர். சனிக்கிழமை தோறும் கூட்டம் பெருகிவந்தது. சோமு செட்டி யார் பிள்ளைப்பெருமானிடம் பொருள் கொடுத் தனுப்பிவைத்தார். பணத்திலே சிறிதும் ஆசையொன் றிலைநான் படைத்தவப் பணங்களைப் பலகால் கிணற்றிலே எறிந்தேன் குளத்திலு மெறிந்தேன் கேணியி லெறிந்தன னெந்தாய் -திரு. 6:20:11 என்றபடி இவர் அப்பணத்தை மேட்டிலும், குளத் திலும், கேணியிலும் எறிந்துவிடுவார். இதை