பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பெற்றுச் சிறிய முயற்சியால் சிறிய விடயங்களைச் சிலநாள் அனுபவிப்பதாகும். மனிதப் பிறப்பில் குறைவின்றி நல்ல அறிவுடையவர்களாய் பசி, பிணி, கொலை முதலிய தடைகளில்லாமல் உற வினர், நண்பர், அயலார் முதலியோர் தழுவ அன்பு, அடக்கம், ஒழுக்கம், வாய்மை முதலிய குணங்களையும் பெற்று மங்கல மனேமாட்சியும் அதன் நன்கலனும் சிறப்பச் சிலநாள் தேக, போக, புவன இன்பத்தை வருந்தி நுகர்வது இம்மையின்ப லாபமாகும். மறுமையின்ப வாழ்வா வது பெரிய தேக கரணங்களைப் பெற்றுப் பெரிய முயற்சியால் பெரிய விடயங்களைப் பலநாள் அனு பவிப்பதாகும். நற்குணங்கள் எல்லாம் பொருந்த சுத்த விடய இன்பங்களைப் பலநாள் எண்ணியபடி தடைபடாமல் அனுபவிக்கின்ற இன்பம் மறுமை யின் ப லாபம் எனப்படும். பேரின்ப வாழ்வாவது எல்லாத் தேகங்களையும் எல்லாக் கரணங்களையும், எல்லாப் புவனங்களையும் எல்லாப் போகங்களையும் அருட்சத்தியின் சந்நிதி விசேடத்தால் தோன்றி விளங்க, விளக்கஞ் செய்விக்கின்ற கடவுளின் பூரண இயற்கை இன் பத்தைப் பெற்று, எக்காலத் தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் அனுபவிப்பதாகும். இந்தப் பேரின்ப லாபம் எல்லாம் தாமாய் விளங்குவதாகும். இந்த லாபத்தை அடைந்தவர்கள் சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் பெற்றவர்களாய் இருப்பார் கள். இவர்களுடைய தேகம் ஐம்பூதங்களாலும் தடைபடுவதில்லை. அவரது கண்கள் அண்ட பிண் டங்களில் அகம் புறமுள்ள எவ்விடத்துமுள்ள