பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 அவ்வழியே போகிறவர்களை கழுதை போகிறது ; மாடு போகிறது; நாய் போகிறது; பேய் போகிறது” என்று இகழ்ந்துகொண்டிருந்தார். நம் பெருமான் அன்று தம் எதிரே வருவதைக் கண்ட சந்நியாசி 'இதோ உத்தம மனிதன் வருகிருன் ' என்று கூறிக்கொண்டே தமது கையால் உடம்பை மறைத்துக்கொண்டனர். சுவாமிகள் அவரிடம் போய் ஏதோ சொல்ல, நிர்வாண சந்நியாசி அன்றிரவே அவ்விடம் விட்டுச் சென்றனர். இந்நிகழ்ச்சியைக் கார ண ப் பட் டு கந்தசாமிப் பிள்ளையும் (சரி. கீர். 46-47) பிறரும் கூறுவர். இக்கதைக்கு வேறு அகச்சான்றில்லை. நம் பிள்ளை ப்பெருமான் ஒருநாள் திருவொற்றி யூர்ப் பெருமானே வழிபட்டுத் திரும்ப நள்ளிரவுக்கு மேலாயிற்று. வீட்டிற்கு வரும் போது தமது தமக்கையார் துரங்கிவிடவே, கதவைத் தட்ட்ாமல் ஒட்டுத்திண்ணையில் பசியுடன் கண்ணயர்ந்தார். அருள் உதவும் பெருந்தாயாகிய வடிவுடையம்மை வீட்டிலிருந்த அவரது தமக்கைபோல் வந்து சுவாமிகளுக்குத் தாமரையிலையில் வெண்பொங்கல் கொடுத்துச் சென்றனள். சிறிது நேரங்கழித்துத் தமக்கையார் விழித்தெழுந்து வந்து தம்பியை எழுப்பி உணவருந்த அழைத்தனர். " சற்று நேரத் திற்குமுன் பொங்கல் கொடுத்தாயே ’ என்று கூறி அங்குக் கிடந்த தாமரையிலையையுங் காட்டினர். தமக்கையார், யான் உனக்கு ஒன்றுங் கொடுக்க வில்லையே, இப்பொழுதுதானே எழுந்துவந்து கதவைத் திறந்தேன்” எ ன் ற தி சயி த் தார்.