பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 இராமலிங்கப் பெருமான் சாற்றுக்கவியாக ஒரு அகவற்பாவும், ஐந்து விருத்தப்பாக்களும் பாடியுத வினர். தண்ணீர் விளக்கு எரிந்தது 1858 ஆம் ஆண்டில் சுவாமிகள் கருங்குழி என்னும் சிற்றுாருக்கு வந்துசேர்ந்தனர். இவ்வூர் வடலூருக்குத் தென்கிழக்கில் மூன்று மைல் தொலே வில் உள்ளது. இங்கிருந்தபோது பரசுராமப் பிள்ளே என்னும் அண்ணன் இறந்தார், இக்கிராமத்தி லிருந்த வேங்கட ரெட்டியாரும் அவர் மனைவியார் முத்தியாலம்மாளும் அடிகளிடம் மிகுந்த அன்பு பாராட்டி அங்கேயே தங்கவேண்டுமென்று வேண் டினர். அதற்கிணங்கிச் சுவாமிகள் நெடுநாள் தங்கினர். தம்மை வளர்த்த சபாபதிப் பிள்ளேயும் சென்னையில் இறந்துபோன செய்திகேட்டு வருந்தி ஞர். வேங்கட ரெட்டியார் வீட்டில் உணவுண்டு இரவெல்லாம் பதிகம்பாடி எழுதுவது வழக்கம். அதற்காக முத்தியாலம்மாள் அடிகள் தங்கியிருந்த அறையில் ஒரு விளக்கும் அதற்கு வேண்டிய எண் ணெயும் ஒரு மாடத்தில் நாள்தோறும் வைப்பார் கள். ஒருநாள் அந்த அம்மையார் பக்கத்து ஊருக்குச் செல்லநேர்ந்தது. வழக்கமாக எண் ணெய் வைக்கும் மண் கலயம் உடைந்துபோன படியால் புதுக்கலயம் ஒன்று வாங்கி அதைப் பழகுவதற்கு நீர்வார்த்து அம்மாடத்திலேயே வைத்திருந்தனர். புறப்படும் அ வ ச ர த் தி ல் விளக்கேற்றினர்களேயன்றி வேறு பாத்திரத்தில்