பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 திருக்கோயில்களுக்கு நடுவே உள்ள பெருவெளி யில் நின்று வடலூரில் தருமச்சாலையை அமைக்க விரும்பினர். மேலும், அங்கு நின்று தென்கிழக்கு மூலையில் பார்த்தால் சிதம்பரத்தின் நான்கு கோபுரங்களும் தெரியும். நடிப்பார் வதிதில்லை நற்கோ புரத்தின் அடிப்பார்வை யும்.வடக்கே யார்ந்து-கொடிப்பாய நின்று வளர்மலைபோ னெஞ்சேபார்த் தாற்றெரியும் இன்றெல் விடத்தெனிலிப் பாட்டு -திரு 6: 89:8 'அன்றியும், தென்கிழக்கே அம்பலமுடைய பூர்வ ஞான சிதம்பரம் உள்ளது. அங்கே பொதுவாக ஐந்து சபைகள் உள்ளன. அவை ஐம்பூதங்களே ஆதாரமாகக் கொண்டவை. அவை, பொற்சபை (நிலம்) ரஜித சபை (நீர்) (இராஜசபை) தெய்வ சபை (நெருப்பு) (தேவசபை) நிருத்த சபை (காற்று) சிற்சபை (வான்)

எனப்படும். எனினும் சிற்சபை விளக்கமே சிறப் பாக உள்ளது சிதம்பரம். கருமசித்திகள் யோக சித்திகள் எ ல் லா ம் விளங்கும். சன்மார்க்க அடைவிற்கு பொற்சபை, சிற்சபை, ஞானசபை என்னும் மூன்றுபடிகள் பேசப்படும். இவற்றுள் ஞானசபை எங்கும் இதுகாறும் எழவில்லை. இது ஞானசித்திகள் விளங்கவேண்டிய ஞானகாலம். அருட்பெருஞ்சோதி ஆண்டவன் அருள் வழங்கி நிலவி நிற்கும் ஞானசபை காணுவதற்கு உற்ற