பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அனுபவமாகவும் இருக்கும். அவர்கள் எக்காலத் தும் அழிவில்லாதவர்களாய்ப் பேரருள் வண்ண முடையவர்களாய் விளங்குவார்கள். ஒரு துரும்பும் அவரது திருநோக்கால் உயிர்பெற்று பஞ்ச கிருத்தி யங்களும் செய்யும். அவரது பெருமை வேதாந்த, சித்தாந்த, கலாந்த, போதாந்த, நாதாந்த, யோ காந்தம் என்ற ஆறந்தத்திலும், அவற்றைக் கடந்தும் விளங்கும். இவையனைத்தும் சுத்தமாதி தேகங்களின் இலக்கணங்களாகும். இவற்றுள் இம்மையின்ப லாபம் மறுமையின் ப லாபம் என்ற இரண்டையும் அருளின் ஏகதேசத் தைக்கொண்டு அடையலாம். பேரின் ப லாபத்தை மாத்திரம் அருளின் பூரணத்தைக்கொண்டுதான் பெறமுடியும். எனவே, சுவாமிகள் பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழவேண்டி அதிதீவிர விருப்பமுயற்சியில் ஈடுபட்டார்கள். இதை எதனுல் பெறுதல் கூடுமென்பதையும் குறிப்பிடு கின் ருர்கள். எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரம் எதனுலே பெறுதல் கூடும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந் தேன்.” திருவருட்சுதந்திரம் எவ்வாறு கிடைக்கும்? எனது யான் என்னும் தேக சுதந்திரம், போக சுதந்திரம், ஜீவ சுதந்திரம் என்னும் மூவகைச் சுதந்திரங்களும் நீங்கியவிடத்துக் கிடைக்கும் என்று அறிந்து தமது சுதந்திரமாகக் கொண்டி ருந்த எல்லாச் சுதந்திரங்களையும் திருவருட்கே சர்வ சுதந்திரமாகக் கொடுத்துவிட்டுத் திருவருட் சுதந்திரத்தைப் பெற அரும்பாடு பட்டார். 'அழியு