பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 சன்மார்க்க சங்கத்திர் சிற்றடியே னுமது தாள்வணங்கிச் சாற்றுகின்றேன். தயவினெடுங் கேட்பீர் என்மார்க்கத் தெனை நுமக்கு ளொருவனெனக் கொள்வீர் எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர் -திரு. 6 : 132 : 63. என்றவதனுல் அடிகள் தமது தாழ்மையைக் கூறிச் சங்கத்தின் ஏற்றத்தை உணர்த்துவது காணலாம். 18-7-1872-இல் வெளியிட்ட ஞான சபை விளக்கப் பத்திரிகையில் அடிகள், “ சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமென்று பெயர் வழங்குதல் வேண்டும் ' என்றனர். தங்கமே யனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச் சங்கமே கண்டு களிக்கவுஞ் சங்கஞ் சார்திருக் கோயில் கண்டிடவும் துங்கமே பெறுஞ்சற் சங்கநீ டுழி துலங்கவுஞ் சங்கத்தி லடியேன் அங்கமே குளிர நின்றனப் பாடி யாடவு மிச்சைகா ணெந்தாய் -திரு. 6 : 20: 21. என்றவதனல், எ த் த ைக ய பெரியோர்களேக் கொண்ட சங்கத்தைத் தோற்றுவிக்க அடிகள் விரும்பினர் என்பதும், சங்கஞ் சார்ந்த சாலேயைத் தோற்றுவித்த அடிகள் சங்கஞ்சார் கோயிலாகிய ஞானசபையைக் கட்டிக் காண விழைந்தனர் என்பதும் புலகுைம்.