பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 கல்பட்டு ஐயா திருநறுங்குன்றத்தில் கல்பட்டு ஐயா என்னும் ஒரு யோகியார் இருந்தார். அவர் தமது யோக, வல்லபத்தினுல் தம்மை ஒரு பெரிய ஞானுசிரியர் இன்ன மாதம், இன்ன கிழமை, இன்ன நேரத்தில் வலிய வந்து ஆட்கொள்வார் என்று அறிந்தார். தாமுணர்ந்தபடி பலருக்கும் உரைத்துத் தமக்கு வரக்கடவ ஞானதேசிகரது வரவெதிர் நோக்கி இருந்தார். அவர் குறிப்பிட்ட அதே நேரத்தில் அடிகள் அவர் முன் தோன்றி ஆட்கொண்டருளி ஞர். கல்பட்டு ஐயா அவர்கள் மரணமிலா திருக்க வேண்டி யோகபாதையில் நின்று காயகல்பம் உண்டு தம்முடம்பைப் பக்குவப்படுத்தி வந்தார். அதையறிந்த சுவாமிகள் அவரது உயிர் தளிர்ப்பத் தடவிப்பார்த்து, ' உடம்பைக் கல்லாக்கிக்கொண் டால் ஞானம் வராதே, ஆல் அரசுபோல ஆயிரம் ஆண்டுகள் அறிவற்று உயிருடன் இருப்பதால் பயனில்லே ' என்று இரங்கினர். சுவாமிகள் ஆணைப்படி கல்பட்டு ஐயா வடலூர் சேர்ந்து தமக்கென அமைக்கப்பட்ட சிறுகுடிலில் அமர்ந்து தருமச்சாலையில் கஞ்சியூற்றும் ப னி ெச ய் து வந்தார். நம் வள்ளற்பெருமான் தருமச்சாலையில் பிரசங்கம் செய்யுங்கால் அவருக்குப் பயன்படக் கூடிய பகுதி வரும்போது சந்நிதிக்கு அழைப்பது வழக்கமாம். ○ ● 23 o கூடலூர் இன்தநாயகம்பிள்ளை சுவாமிகளிடம் பேரன்பு பூண்டவர். அவரது மகன் ஐயாசாமிப் பிள்ளை நோய்வாய்ப்பட்டு உயிர் நீங்கும் நிலையாகி