பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 இருந்துவிட்டு, * திருவருட்பிரகாச வள்ளலா ரென்னும் சிதம்பரம் இராமலிங்கம் ' என்று தம்மைச் சுட்டியது கண்டு வேறு பொருள் விரித்தனர் போலும். திருவருட்பா வாதம் திருவருட்பாவின் முதல் நான்கு திருமுறைகள் வெளிவந்ததும் ஈழநாட்டிலிருந்து வந்திருந்த நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களின் அபிமானி களுக்கும் சிதம்பரம் இராமலிங்க அடிகளின் அபிமானிகளுக்கும் பத்திரிகை வாயிலாகவும் வேறுவகையாகவும் வாதம் மூண்டது. யாழ்ப் பாணத்திற்கு அணித்தான நல்லூர் என்ற ஊரைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் தவச்சிறந்த சைவசமய அறிஞர். சைவசித்தாந்த நூலறிவிலும், தமிழ் எழுதும் திறத்திலும் அவர் சிவஞான முனிவருக்கு. ஒத்து விளங்கினர். அவர் வடமொழிப் புலமையும் ஆங்கில அறிவும் உடையவர் என்ப. இலங்கைத் தீவில் கிறித்தவ சமயம் பெருகி வளர்ந்து வரு வதைக் கண்ட அவர் ஆற்ருது சைவசமயப் பிரசாரம் செய்துவந்தார். பழமையில் ஊறியவர். சைவமும் தமிழ்த்தொண்டும் அவருக்கு உயிர்நாடி யாக இருந்தன. நல்லபல சமயத் தமிழ் நூல்களே எழுதினர். அவரதுதிருக்குறள், திருக்கோவையார். பெரியபுராணம் மு. த லி ய பதிப்பு நூல்கள் மாசற்றவை. பெரியபுராணத்திற்கு அவர் எழுதி யுள்ள சூசனம் சிறப்புடையது. இவர் புதுமையை வெறுத்தார். சாதி, சமயம், மதம் இவற்றின் ஆசா