பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 சபையின் கொடி மரம் வ | ங் க வே ண் டி கண்டிராக்டர் ஆறுமுக முதலியார் தபால் வண்டி யில் சென்னைக்குச் சென்ருர். மரவாடியில் தாம் வேண்டிய நீளமுள்ள மரமின்மையாலும், அதுவும் விலை அதிகமாக இருந்தபடியாலும் முதலியார் வடலூருக்குத் திரும்பிவந்து வ ள் ள லாரி டம் விண்ணப்பிக்க, நீர் போயிரும் நான் வருவேன்' என்று கூறியனுப்பினர். அங்ங்னமே முதலியார் மரவாடிக்குச் சென்றபோது, எம்மரம் சபையின் கொடிமரத்திற்குப் பொருந்துமோ அம்மரத்தின்மீது வள்ளலார் உலவிக்கொண்டிருந்ததைக் கண்டார். மிகவும் வியப்புற்று மரத்தை விலை கேட்க, கடைக் காரர் விலைப்பட்டியலைக் காட்டினர். மரம் வாங்கிய பின் பெருமானைத் தம் வீட்டிற்கு அழைத்தேக எண்ணிய முதலியாரை, நீர் போய்வாரும் ” என்று விடைகொடுத்துத் தாமும் புறப்பட்டார். ஆறுமுக முதலியார் வடலூருக்கு வ ந் த பி ன் வள்ளலார் அதே நேரத்தில் வழக்கப்படி வட லூரில் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார் எனக் கேட்டு வியந்து சுவாமிகளிடம் பணிந்து நின்ருர். நம் வள்ளல், “ இது ஆண்டவன் செயல்; வெளிப் படுத்தவேண்டாம்” என்று கட்டளையிட்டனர். இந்த அற்புதச் செயலுக்கும் அருட்பாவில் சான்றில்லை. .ெ கா டி ம ர ம் வாங்கவேண்டியது அவசியமாயிற்று. சென்னைக்குப் போய்வருவது அந்நாளில் அத்துணை எளிதன்று. அற்புதம் செய்யவேண்டுமென்று அடிகள் விரும்பவில்லை. வேண்டிய மரத்தைப் பெறவேண்டும். இஃது