பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 சாத்தியமுள்ள பொன்மையிற் பச் ைச ப் பகுதி முதலான ஏனைய திரைகள் ஆண்டவனருளால் உண்மை ஞானிக்குத் தாமே விலகும். அப்போது ஆன்மப் பிரகாசமாகிய ஞான ஒளி மாசற்ற கண்ணுடியாகிய மறுவற்ற உள்ளத்தில் புலப்படும். அவ்வொளிக்குள் ஒளியாக அருட்பெருஞ்ஜோதி தெரியும். இப்பெரும் பேரொளியைத் தம்முட் கண்ட வள்ள ற்பெருமான் அருட்பெருஞ்ஜோதியை அனைவரும் கண்டு தாம் பெற்ற பேரின் பங் கொள்ளும்பொருட்டு புறத்தில் ஞானசபையைக் கட்டுவித்து அருட்பெருஞ்ஜோதியையும் காட்டிக் கொடுத்தார். மேலும், ஞான சபையைச் சுத்த சன்மார்க் கத்தின் முக்கிய லட்சியமென்றும், இதனை அருட் பெருஞ்ஜோதி ஆண்டவன் தனது திரு வரு ட் சம்மதத்தால் இயற்றுவித்தான் என்றும் கூறினர். கடவுளின் திருக்குறிப்பை, இக் காலந் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம், அளவு குறிக்கப்படாத அ ற் பு த ச் சித்திகளெல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின் ரும் ” என்று ஆண்டவன் கூறியதாக அறிவித்தார். - ஆதலின் வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களா யின் கருதியவண்ணம் பெற்றுக் களிப்படைவது 'மன்றி, இறந்தவர் உயிர்பெற்றெழுதல், மூப்பினர் இளமையைப் பெற்றுநிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடை வீர்கள் ' என்று ஞானசபையின் உண்மையை விளக்கியருளினர்கள். முதல் தைப்பூசத் தரிச