பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Съ. சிவமயம் அருட்பெருஞ்ஜோதி ஞானசபை விளக்கப் பத்திரிகை அருட்பெருஞ்ஜோதி அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் ! இன்றுதொடங்கி, சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை யென்றும், சாலைக்கு சமரச சுத்தசன்மார்க்க சத்திய தருமச் சாலை யென்றும், சங்கத்திற்கு சமரச சுத்தசன் மார்க்க சத்திய சங்கம் என்றும் பெயர் வழங்குதல் வேண்டும். இன்றுதொடங்கி, அ ரு ட் .ெ ப. ரு ஞ் ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ்சித்தி வெளிப்படும் வரைக்கும். ஞானசபைக்குள்ளே தகரக்கண்ணுடி விளக்கு வைத்தல் வேண்டும். பித்தளை முதலிய வற்ருல் செய்த குத்துவிளக்கு வேண்டாம். மேலேற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம். தகரக்கண்ணுடி விளக்கு வைக்குங் காலத்தில் தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி, கரண சுத்தி உடையவர்களாய் திருவாயிற் படிப் புறத்தி லிருந்துகொண்டு விளக்கேற்றி பன்னி ரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர் கையில் கொடுத் தாவது, எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது, உட்புற வாயில் களுக்குச் சமீபங்களில் வைத்துவரச் செய்விக்க வேண்டும். நாலு நாளைக்கொருவிசை காலையில், மேற் குறித்த சிறியரைக் கொண்டாயினும், பெரியரைக்