பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241 அன்பர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு அடிகளுக்குத் தொல்லை கொடுத்தனர். இதையறிந்த அடிகளார் இப்படிப் பட்டவர்கள் இங்கிருத்தல் வேண்டாமென்று ஒர் எச்சரிப்புப் பத்திரிகை எழுதினர். சத்திய ஞான விண்ணப்பமென்னும் ஆடகப் பசும்பொன் ஆயிரங்கோடி பெறும் அதனே எழுதிய அந்நேரத் தில் நம்பெருமான் திருவிரல்கள் இதனையும் எழுத நேர்ந்தது. திருக்காப்பிட்டுக்கொண்டது சித்திவளாகத் திருமாளிகையில் சிலநாள் தொடர்ச்சியாகச் சிவானுபவத்தில் திளைத்திருப் பதும் பின்னர் வெளிவந்து பிரசங்கம் செய்வதுமாக இருந்தனர் சுவாமிகள். கள்ளவா தனையைக் களைந்தருள் நெறியைக் காதலித் தொருமையிற் கலந்தே உள்ளவா றிந்த உலகெலாங் களிப்புற் ருேங்குத லென்றுவந் துறுமோ வள்ளலே அதுகண் டடியனே னுள்ள மகிழ்தலென் ருேவெனத் துயர்ந்தேன் ஒள்ளியோய் நினது திருவுள மறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே --திரு. 6 : 23 : 10 என்றவண்ணம் மக்கள் எல்லோரும் சுத்த சன்மார்க்கப் பேறு பெறவேண்டுமென்று ஆண்ட வனே வேண்டினர். சமரச சுத்தசன்மார்க்க சங்கச் 16