பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 சுவாமிகள் எப்பொழுதும் முக்காடிட்டு இருப்ப தோடு பிற்பகுதியில் அந்த முக்காட்டை வலக் கண் மறையும்படியாகவும் மூடியிருந்தார். அன் பர்கள் அதன் உண்மையை அறிந்துகொள்ள எண்ணிஞரேனும் சுவாமிகளைக் கேட்க அன்பி ளுல் அஞ்சினர். ஒருநாள் வீராசாமியாகிய சிறு வரை ஏ ன் தாத்தா அப்படி மூடிக்கொண்டி ருக்கிறீர்கள் ?” என்று கேட்கும்படித் துாண்டி விட்டனர். நம்பெருமான் முக்காட்டை விலக்கிய போது வலக்கண் மூடியவண்ணம் இருந்தது. கண்மலர்தலும் பேரொளிப்பிழம்பு, கதிர்ஒளி யினும் பெரிதாய் வீசிற்று. உடனே பெருமான் வலக் கண்ணே மூடிக்கொண்டு, * நீவிர் இங்கு நெருங்கிப்பழகுவது அசாத்தியமாகும் 6г 6йг ш தற்கே அப்படி மூடி மறைத் திருந்தோம் ' என்று அருளினர். இதன் உண்மையை, கதிர்நலம் என்னிரு கண்களிற் கொடுத்தே , அதிசயம் இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி -திரு. 6: 1:273 என்பதல்ை அறியலாம். - இந்நிகழ்ச்சிகள் எல்லாம் புருஷோத்தம ரெட்டியார் மகன் வீராசாமி ரெட்டியாரால் கூறி விளக்கப்பட்டவை. காரணப்பட்டு கந்தசாமிப் பிள்ளையிடம் அறிந்தெழுதிய சிதம்பர சுவாமிகளும் இதனைக் கூறுவர். - ஒருபோது சுவாமிகள் அன்பர்களை நோக்கி, நம்மோடு கூடிப்பழகி இருந்தவர்களையும் பின் னர் கேள்வியால் விரும்புகின்றவர்களையும் கைவிட