பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 மாட்டோம்; சுத்தசன்மார்க்கத்தில் நிறுவுவோம்” என்று அஞ்சலி செய்தனர். உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி யுன்னறி வடையுநாள் வரையில் இலகியென் ைேடு பழகியு மெனத்தான் எண்ணியும் நண்ணியும் பின்னர் விலகிய மாந்தர் அனைவரு மிங்கே மெய்யுறக் கூடிநின் றுனையே அலகிற்பே ரன்பில் போற்றிவாழ்ந் திடவும் அடியனேற் கிச்சைகா ணெந்தாய் -திரு. 6: 20:19, என்றும், எனையடுத்தார் சுகம்வாய்ந்திடல் வேண்டும் என்றும், வ்ைவுயிரும் இன்படைதல் வேண்டும் என்றும், ஆதியு நடுவு மந்தமுமில்லா அருட்பெருஞ் ஜோதியென் னுளத்தே நீதியிற் கலந்து நிறைந்தது நானு நித்திய ணுயினே னுலகீர் சாதியு மதமும் சமயமுந் தவிர்த்தே சத்திய சுத்தசன் மார்க்க வீதியி லுமைத்தா னிறுவுவ லுண்மை விளம்பினேன் வம்மினுே விரைந்தே -திரு. 6:132; 75 என்றுங் கூறுவன காண்க.