பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சன்மார்க்க விண்ணப்பம் பெரிதும் பாதிக்கின்றது. அதல்ை சன்மார்க்கத்தையே வெறுக்கத் தலைப் பட்டனர். சுவாமிகளைப் பழிசு றும் கூட்டமும் வலுத்தது. இதனைத் .ெ த ா ழு, வூ ர் வேலாயுத முதலியார் பிரமஞான சங்கத்துக்கு எழுதிய உண்மைகளில் க ா ன ல ா ம் . . இவர் சாதி வேற்றுமை பாராட்டலாகாது என்று போதித்ததால் ஜனங்கள் அதில் பிரியப்பட்டார்களிலர் ” என்று குறிப்பிடுகின் ருர். ஆனல், சுவாமிகள் மக்களை யெல்லாம் ஒன்றுபடுத்த முயன்ருர்கள். மன்பதை உலகுக்குள்ள சகோதர ஒற்றுமையைப்பற்றிப் பேசினர்கள். ஆன்ம உயிர்வருக்கத்திற்குள்ள ஆன்மநேய ஒருமைப்பாட்டை எடுத்துக் காட்டி ஞர்கள். அந்த ஒருமைப்பாட்டு உரிமையால் உலகர் அனைவரும் தாம் பெற்ற பேறு பெற விழைந் தார்கள். நினைப்பதற்கும் எட்டாத நிலைக்கு நம்மை அழைத்தார்கள்.

  • உலகத்தினிடத்தே பெறுதற்கு மிக வு ம் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர் களே ! அறிவு வந்த காலமுதல் அறிந்தறியாத அற்புத அறிவுகளையும், அடைந்தறியாத அற்புதக் குணங்களையும், கேட்டறியாத அற்புதக் கேள்வி களையும், செய்தறியாத அற்புதச் செயல்களையும், கண்டறியாத அற்புதக் காட்சிகளையும், அனுபவித் தறியாத அற்புத அனுபவங்களேயும் இது தருணந் தொடங்கிக் கிடைக்கப்பெறுகின்றே னென்று உணருகின்ற ஓர் சத்திய உணர்ச்சியால் பெருங் களிப்புடையேனுகி இருக்கின்றேன். நீவிர்களும்