பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணும் உயர் நிலைக்கு ஏற்றும். பிற உயிரைத் தம்முயிர்போல் எண்ணும் நிலையில் உயிர்களிடையே வேறுபாடு தோன்றுவதில்லை. உண்மையில் ஆன்மநேய உரிமை இங்குத்ான் தோன்றும். சுத்த சன்மார்க் கத்தின் முக்கிய லட்சியம் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை ஆகும். ஆன்மநேய ஒருமையும், ஆன்மநேய உரிமையும் ஒன்றல்ல. ஆன்ம நேய ஒருமை வேறு, ஆ ன் ம .ே ந. ய உரிமை வேறு. ஆன்மாக்களின் ஒருமை விளங் கில்ை அவற்றின் உரிமை தோன்றும். இந்த உரிமை தோன்றினுல் ஆன்ம ஒப்புமை பிறக்கும். ஆன்ம உரிமையும், ஆன்ம ஒப்புமையும் ஆன்ம உவப்புக்கு வழிகாட்டிகள். ஆன்ம உரிமையால் உயிர்க்குதவி செய்து உ வ க் கு ம் உள்ளத்தில் ஆண்டவன் நடஞ்செய்கின் ருன். இவ்வாறு ஆன்ம உவகையை வருவித்துக்கொள்ளும் வித்த கர்கள் இன்னும் மேற்படிக்கு ஏறுகின்றனர். இவர்கள் கருணையே வடிவாக, அன்பே உருவாக இருப்பவர்கள். ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை மலர்ந்து, காய்த்துப் பழுத்து நெகிழ்ந்து ஓங்குமிப்புண்ணியர் சன்மார்க்கப் பெருநீதி செலுத் துவர். சுத்ததேகமாகிய அன்புருவம் பெற்றவர்கள் இவர்களே. இப்புண்ணியர்கள்தாம் சன்மார்க்கப் பெருநெறிக்கு உரியவர்கள் ஆகின்றனர். இக் கருத்தைச் சுவாமிகள் பராபரன் உண்மை நிலையம் என்ற தலைப்பில் அருளியுள்ளார்கள். இவ்வனு பவம் சுவாமிகளுக்குத்தான் முதலில் முற்றும் பொருந்தும்.