பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அறிந்தோம். இனி, சத்விசாரத்தைப்பற்றிச் சற்று நோக்குவோம். ச த் வி சா ர ம் இருவகைப்படும். எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளின் பெருமையை நினைந்தும் உணர்ந்தும் நெகிழ்வது ஒன்று; நமது சிறுமையை எண் ணி வருந்தி இறைவனிடம் விண்ணப்பித்தல் மற்ருென்று. இவ்விரண்டு தலைப் பில் திருவருட்பா திருமுறைகள் ஆறும் அடங்கி விடுகின்றன. நமது சிறுமை என்றபோது ஆண்ட வனுக்குமுன் நாம் எம்மாத்திரம் என்ற எண்ணம் மாறலாகாது. சுவாமிகளின் எண்ணமெலாம் தமது அநித் திய தேகத்தைச் சுத்த தேகமாக மாற்றுவதிலேயே முனைந்திருந்தது. யா க் ைக நிலையாமையை எண்ணித் துன்புறுவார். " புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனுள் பு கு ந் து நானிருக்கின்ற புணர்ப்பும் என்னல் எண்ணிச் சகிக்க முடிய வில்லையே ’ என்று ஏங்குவார். குருதியால் குழைத்த புலால் கொண்டு கட்டிய சிறுகுடில்; அதில் பெருந்துளைகளாக ஒன்பது வாயில் ; நுண்துளைகள் எ ண் ண ற் ற ைவ; உள்ளே பேரிருள் ; இதில் ஐம்பொறிகளாகிய பேய் ஒரு புறம்; ஐம்புல ബേ_f இன்னுெருபுறம்; அந்தக் கரணம் நான்கும் பற்று நினைத்தெழும் மற்ருெரு புறத்தில்; பசிக்கனல் சூழ்ந்து நிற்கும்; காமாதி அரட்டர் மடிபிடித்து வருத்துவர் ; இதனுள் ஏது மறியாச் சிறியேனேச் சிறைப்படுத்தி விளையாடும் நின் திருவிளையாடலே என்னென்பேன் ' என்று உயிர்களின் சிறுமையெண்ணி வருந்துகின்ருர்.