பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சத்தியஞ் செய்கின்றேன் சகத்தி ரறிமின்கள் சித்தியெலாம் வல்ல சிவமொன்றே-நித்தியமென் றெண்ணுமெண்ணத் தாலே நம் மென்னமெலாங் கைகூடும் நண்ணுமின்பத் தேனென்று நான். -திரு.6: 109 : 26. கண்டதெலா மநித்தியமே கேட்டதெலாம் பழுதே கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே உண்டதெலாம் மலமேயுட் கொண்டதெலாங் குறையே -திரு. 6: 110 : 4. என்ற விவேகம் வரும். இது வருவதற்கு *sp.6лг மந்தோ இவ்வுலகம்’ என்று அருளை நாடுகின்ற ஞானம் பிறக்கவேண்டும். ' அருளலா தனுவும் அசைந்திடா ததனுல் அருள் நலம் பரவுக ; அருளுறின் எல்லாமாகும் ; ஈதுண்மை ; அருளுற முயல்க’’ என்றவாறு அருளையே பொருளாக நாடவேண்டும். இந்த ஞானம் பிறப்பதற்குச் சகப்பழக்க வாதனை நீங்கவேண்டும். சகப்பழக்கம் கெடுவதற்கு, உயிரையும் உயிரைப்பற்றி உறுத் தும் பாசங்களையும்பற்றிச் சற்று ஊன்றி விசாரிக்கும் எண்ணம் வரவேண்டும். நமக்கு இந்த எண் ணம் எப்பொழுது வரும் ? நான் யார்? ஞானம் என்ருல் என்ன ? என்னே யார் அறிவார் ? என்று உசாவி எண் ணில்ை சகப்பழக்கம் நீங்கும். இங்ங்னம் எண்ணுதல் சாதுக்கள் சங்கம் அடைந் தால்தான் கைகூடும். பற்றற்ருன் பற்றினையே பற்றியிடல் வேண்டுமது பற்றற்ரு லன்றிப் பலியாதால்-பற்றற்றல் வேதனையா லிங்கு விரியுஞ் சகப்பழக்க வாதனைபோய் நீங்கிலன்றி வாராதால்-வாதனையும்