பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சித்திகள் எல்லாவற்றையும் திருக்கடைக் கணிப் பாற் செய்யவல்லவர்கள். இந்த எழுவகையான நித்தியர்கள் எல்லாம் திருவருட் சமூகத்தை அடைந்த உண்மை ஞானிகள். இவர்களது சித்தி வல்லப தரத்தை வகுத்தறிந்து வாழ்த்த முயன்று முடியாமல் வேதாகமங்களும், பஞ்சகருத்தர்களும், சத்திசத்தர்களும் அதிசயித்து மயங்குகின்றனர் என் பார். இந்த உண்மை ஞானிகளுக்கு சித்தவல்லப தரத்தைக் கொடுத்தருளிய திருவருட்சமூகத்தின் இயற்கையுண்மை விளக்கத்தரத்தையும் அடுத்த படியாக அறிவிக்கின் ருர். எல்லா ச் சத்தி களுக்கும் எல்லாச்சத்தர்களுக்கும், எல்லா மூர்த்தி களுக்கும், எல்லா மூர்த்தர்களுக்கும், எல்லாத் தேவிகளுக்கும், எல்லாத்தேவர்களுக்கும், எல்லாச் சாதனர்களுக்கும், எல்லாச் சாத்தியர்களுக்கும், எல்லா உயிர்களுக்கும், எல்லாத் தத்துவங்களுக் கும், எல்லாப் பொருள்களுக்கும், எல்லாக் குணங் களுக்கும், எல்லாச் செயல்களுக்கும், எல்லா அனுபவங்களுக்கும், மற்றெல்லாவற்றிற்கும் முதற் காரணமாயும், நிமித்த காரணமாயும், துணைக் காரணமாயும், இவையல்லவாயும் விளங்குகின்றது திருவருட் சமூகம். இதற்கும் மேலாக அருட் பெருஞ்ஜோதித் தனிப்பெரும் பதியாகிய இறை வனது திருவண்ணமும் இதில் விளக்கப்பட் டுள்ளது. இதனை வேறு தலைப்பில் காணலாம். - ஆகவே, ஆண்டவனது திருவருட் சமூகத்தை