பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பெரும் பேரனுபவங்கள் உயிரனுபவம் இராமலிங்க சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய உண்மை நெறி யி னே க் கடைப்பிடித்துவந்தால் சாகாக்கலே அனுபவங்கள் கைகூடும். இவை உயிரனுபவம், அருளனுபவம், சிவானுபவம் எனப் படும். இவ்வுண்மையினே ஆளுடைய பிள்ளையார் அருள்மாலையில் அடிகள் விளக்கியுள்ளனர். பொத்திய மூல மலப்பிணி தவிர்க்கும் பொருளருள் அநுபவ மதற்குப் பத்திய முயிரின் அநுபவ மிதனைப் பற்றறப் பற்றுதி யிதுவே சத்திய மெனவென் றனக்கருள் புரிந்த தனிப்பெருங் கருணையென் புகல்வேன் முத்தியற் சிவிகை யிவர்ந்தருள் நெறியின் முதலர சியற்றிய துரையே --திரு.4: 9: 6 திருஞானசம்பந்தப் பெருமானை அடிகள் 'முத்தியற் சிவிகை யிவர்ந்து அருள்நெறியில் முதலரசியற்றிய துரை” எனத் துதிக்கின்ருர். காழிப் பெருமான் பற்பல அதிசயங்களைச் செய்தனர். எனினும், சன் மார்க்க அனுபவங்களைக் குறிக்கும் இப்பாடலில் அவர் முத்துச் சி வி ைக யி ல் இவர்ந்தருளிய செய்தியை விதந்து எடுத்துரைத்தது சிந்திக்கற் பாலது. ஆயிரக்கணக்கான தேவாரப் பதிகங்களில்