பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 -ஊரியங்கத் தஞ்சந் தருமலரோன் தத்துவமாம் பூதங்கள் அஞ்சும் பொறியஞ்சும் அஞ்சறிவும்-அஞ்செனுமோர் வாக்குமுத லஞ்சுமற்று மாலோன்றன் தத்துவமாம் ஊக்குங் கலைமுதலா மோரேழும்-நிக்கியப்பால் மேவி விளங்குசுத்த வித்தைமுதல் நாதமட்டும் தாவி வயங்குசுத்த தத்துவத்தின்-மேவியகன்று அப்பால் அருள்கண் டருளால் தமைத்தாம் கண்டு திரு 1: 3: 679-683 HT மலரோன் தத்துவங்கள் பிரமதத்துவம் எனவும் படும். அவையாவன : மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பூதங்கள் ஐந்து : மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறி கள் ஐந்து : உறுதல், உண்ணுதல், காணுதல், உயிர்த்தல், கேட்டல் ஆகிய புலன்கள் ஐந்து: வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் ஆகிய கன்மேந்திரியங்கள் ஐந்து : மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய கரணங்கள் நான்கு : ஆக பிரமதத்துவம் இருபத்துநான்காம். அடுத்தாற்போல் மா ேல | ன் தத்துவங்கள். அவையாவன : கலே, வித்தை, அராகம், நியதி, காலம், மோகினி, புருடன் என ஏழு தத்துவங்கள் ஆகும்.