பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 என்றவாறு பற்றற்ருன் பற்றினைப் பற்றிக்கொண்டு இமைப்பொழுதும் நெஞ்சில் அவன் தாள் நீங்கா வண்ணம் நிலைத்து நின்ருல் தத்துவமனைத்தும் தவிரும். தத்துவ மனைத்தும் தவிர்த்துநான் தனித்த தருணத்திற் கிடைத்ததொன் றென்கோ சத்துவ நிரம்புஞ் சுத்தசன் மார்க்கந் தனிலுறு மனுபவ மென்கோ ஒத்துவந் தெனத்தான் கலந்துகொண் டெனக்குள் ஒங்கிய ஒருமையே என்கோ -திரு. 6: 51 : 8 தத்துவமனைத்தையும் ஆண்டவன் த ன் வ. ச மாக்கிக்கொண்டு அருளுதலையுங் குறிப்பிடுகின் ருர் அடிகள். நமது சுதந்தரங்களனைத்தையும் சர்வ சுதந்தரராகிய கடவுளிடம் ஒப்படைத்தபோது நம்மைச் சூழ்ந்துள்ள தத்துவங்களனைத்தையும் தன்வசமாக்கியருள்வான் போலும். தத்துவ மெல்லாமெந் தன்வச மாக்கிச் சாகாவ ரத்தையுந் தந்தெனைத் தேற்றி ஒத்துவந் துள்ளே கலந்துகொண் டெல்லா உலகமும் போற்ற உயர்நிலை யேற்றி -திரு. 6: 33 : 5 அன்றி, தத்துவமெல்லாம் ஒன்றன்பின் ஒன்ருக விடுபட்டுத் தனித்தபோது ஆண்டவன் அருள் வெளிப்படும். தத்துவ மனைத்துந் தாம் ஒருங் கொழிந்திடச் சத்துவ மொன்றே தனித்துநின் ருேங்கிட உலகெலாம் விடய முளவெலா மறைந்திட