பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தஸ்யபாவா = தத்வம்-அசி என்று கொள்ள வேண்டும். அப்போது, தத்= பரத்தின்: துவம் = தர்மமாக; அசி = ஆனய். அதாவது பரத் தின் தர்மமாக ஆய்ை என்பது கருத்து. அத்துவிதம் இந்தக் கொள்கையினர் தத்துவமசி என்னும் சொற்ருெடரை, o தத்-துவம்-அசி என்று பிரிப்பர். ஆயினும் பொருள் கொள்ளுதல் வேருயிருக்கும். தத் = அது; துவம் = நீ; அசி = ஆளுய். அதாவது அதுவே நீ; நீயூேஆது என்று பொருள் கொள்ளுவர். அகம்பிர்ம்மா "என்னும் மகாவாக் கியம் நான் பிர்ம்மமானேன் என்னும் பொருள் படும். சிவோகம் என்பதும் நான் சிவமாக இருக் கிறேன் என்று பொருள்படும். அது நீயாய்ை என்றபோது ஆன்மா பரம்பொருளுடன் ஒன்ருகி அதுவாக இருத்தலின் இருபொருளன்றி ஒன் ருக விளங்கும். ஆதலின், இருபொருளும் இரண்டற்று ஒன்றேயாகி அத்துவிதப் பொருள் பயக்கும். சிவாத்துவிதம் இது சிவத்தொடு ஒன்ருகி நிற்றல் எனப்படும். சைவசித்தாந்தம் இந்த முடிபினே உடையது.