பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அனுபவத்தில் தத்துவமசி மகாவாக்கியத்திலுள்ள துவம் பதமும், பரதுரிய அனுபவத்தில் தற்பதமும், சிவதுரிய அனுபவத்தில் அசிபதமும் கைகூடும். அதனுல் சிவதுரியத்தில் தத்துவமசி மகாவாக் கியத்தின் சிவாத்துவிதப் பொருளுக்கேற்பச் சீவன் பரமசிவனுமே என்பர். சீவன் கெட்டு சிவத்துடன் ஒன்றுமெனில், | சீவன் கெட்டுப்போன படியால் சிவக்கலப்பில்லை என்றும், சீவன் கெடாது ஒன்றுமெனில் கெடாத வழி, சீவன் சிவன் என இரு பொருளாய் நிற்றலின் 2. ஒன்ருதல் இல்லை என்றும், கூடியபின் கெட்ட தெனின் சீவன் கெட்டவழி முத்திபெறுவதொன்று 3 இல்லையாகுமென்றும், சீவன் கெட்டுப்போதலே முத்தி எனின் சீவன் நித்தியப் பொருளாதல் 4 செல்லாது என்றும், சீவன் தனது ஏகதேச அறிவு கெட்டுச் சிவத்தோடு கூடுமெனில், கெட்டவழி வியாபகப் பொருள் விளங்குதல் இன்மையால் 気 கூடுமாறில்லை என்றும், ஏகதேச அறிவைச் செய் யும் மலங்கள் மட்டும் கெட்டுச் சீவன் சிவத் தொடுங் கூடுமென்றும் கூறுவர். மற்று, சீவன் சிவானுபவம் ஒன்றினுக்கு மட்டும் உரியதன்றி சிவகுணங்களைப் பெறுமாறில்லை என்றும், பரமுத்தி யில் துலங்கெட்டு உயிர் முத்தியிலகுமென்றும் தத்தம் மதங்கட்கேற்பக் கூறுவர். முத்தியிலும் உருவச்சித்தி, அருவச்சித்தி, அருவுருவச்சித்தி முதலிய சித்திகளைப் பெற்ற ஞானிகளும் உண் டென்பர். -