பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 பெற்றுக் கடவுளானவர்களே நம்மையெல்லாம் ஆட்கொண்டு அருள வந்த நமது சமயகுரவர் களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் ஆகியோரும், ஆண்டாள் (திருமங்கையாழ்வார் மு. த லா ன வைணவப் பெரியோர்களும், இராமலிங்க அடிகளும், இன்ன பிறரும். இப்பெரியோரெல்லாம் எல்லா மக்களையும் போலத் தாய் வயிற்றுதித்து, மக்களுடன் வாழ்ந்து வந்தவர்கள்; ஆண்டவனது அருளே ஆராதுண்ட வர்கள் மண்ணிற்கலவாமல் வானிற் கலந்த 6h JIT с5Б 6YГ. இதனை உண்மை முத்திநிலை ਾਂ) உயர்ந்த செம்பொருள் நூ லு ம் வலியுறுத்தும். நமது உடலுக்குத் தமிழில் மெய் என்று பெயர். இதனைப் பொய்யாக்கிவிடாமல் .ெ ம ய் ய ா க நிலைக்கச் செய்தல்தான் பிறவியின் நோக்கம். நமது உடம்பு உயிருடன் கூடி மெய்யான தெய்வத்தின் மெய் யருள் பெற்று மெய்யாகி நிலைபெற வேண்டுமெனப் பலப்பல ஏதுகாட்டி விளக்கும் இச்சிறு நன்னூல் உள்ளங்கவரும் பான் மையது. இனி, சுத்தந் தோய்ந்த சமரச அத்துவிதம் என்று கூறுவதற்குரிய சுத்த சன்மார்க்கத்தில், ஆன்மா குடிகொண்டுள்ள துால தேகம் சுத்த தேகமாகிப் பின்னர் பிரணவ தேகமாக மாறி, அதன்பின் கடவுள் தேகமாகிய ஞான தேகமும் பெற்றுக் கடவுள்மயமாகி நிலைக்கும். இம்மாற்றத் தின் கண் ஆன்மா தன் அசுத்த தேகத்தைச் சுத்த தேகமெனப்படும் அன்புருவாக மாற்றிக்