பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 ஒடினேன் ஒடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதந் தெரிந்து -திருமங்கையாழ்வார் என் புழிப்போல உணர்வு என்பது பெரும் அனுபவ பதமாகும். அடுத்து, உணர்ந்து உணர்ந்து என் ருர். முன்போலவே உணர்ந்து, உணர்ந்து, உணர்ந்து, உணர்ந்து என்று பொருள் கொள்ள வேண்டும். 'உணர்ந்து உணர்ந்து உணரா உணர்ச்சியால் உணர்ந்து ’ என்று அடிகள் கூறியது காண்க. உணர்ந்து என்றுமட்டும் சொன்னுல் உணர்வு நின்றுபோய் வேருென்று வரும். அவ்வாறு வராத உணர்வு தொடர்ந்து நிகழவேண்டும் என்பதற் كوسلو காகவும் ஓரளவு உணர்ந்து மேம்பட்டநிலை தாழா மல் மேன் மேலும் உணர்வு ஓங்கவேண்டும் என் பதற்காகவும் உணர்ந்து உணர்ந்து என் ருர். இந்த உணர்வின் விளைவு நெகிழ்ச்சி. நெகிழ்ச்சி வருந் துணையும் உணர்தல் வேண்டும் என்றுங் கூறலாம். நினைத்தலும், உணர்தலும் கரணங்களின் காரியங் கள்; நெகிழ்ச்சி ஆன்ம காரியம். இந்த நெகிழ்ச்சி வராதபோது அடிகள் அஞ்சிர்ைகள். நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் நெகிழ்ச்சியில் லாமையால் நடுங்கிப் பருத்தவென் னுடம்பைப் பார்த்திடா தஞ்சிப் படுத்தது மையநீ யறிவாய் -திரு. 6 : 21 : 36 இந்த ஆன்ம நெகிழ்ச்சியை வருவித்துக்கொண் டால்தான் திருவருள் கைகூடும். சீவர்களுக்கு ஏனைய சீவர்களைப்பற்றி உ ண் டா கு ம் ஆன்ம