பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தும், தமது ஊனினை உருக்கி உள்ளொளியைப் பெருகச்செய்ததும், தமது பூத உடலே அள்ளுருக் கையாக மாற்றியதும், அற்புதமான அமுத தாரை கள் தமது எற்புத்துளே தொறும் தேங்கிடச் செய்த தும் அப்பெருமான் ஆண்டவன் பால் வைத்த அன்பினுல்தான். ஆகவே, அவர் அன்பினுல் ஆண்டவன் அருள் பெற்று அன்புருவமாகிய சுத்ததேகம் பெற்றனர். ஆண்டவனே நினைந்து எழும் நெகிழ்ச்சியை உருகும் நிலை (Melting mood) என்றும், அவனது அருளுக்காக அழுது நிற்கும்போது உண்டாகும் assöör 6oofsoj 3, 4, 6 , fi ở (The gift of God) என்றும் செயின்ட் தெரசா போன் ருர் கூறுப. வேற்று விகாரப்படாத அந்த அன்பு மீதுர அவன் பால் வைத்த பேராசைப் பெருவெள்ளம் அணைகடந்து செல்லும்போது கண்ணின் நீர் பெருகிக் கால்வழிந்து ஒடும். இக்கண்ணிரால் உடம்பு நனைந்து நனைந்து தொடர்ந்து நனேந்து நஆனந்து, அருளமுதே ! நல்ல நிதியே! ஞான நடத்து அரசே! என்னுரிமை நாயகனே! என்று வனந்து வனைந்து, அண்முதல் தடித்திட ஏத்தி வணங்கினுல், அண்ணல் அதுகண்டு அருள் புரியும்; மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திட லாம்; எல்லோரும் வாருங்கள்; உலுத்துப்போன வரும் இந்த மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந் திடலாம்; இது பொய்யுரையன்று; புனைந்துரையு. மன்று; முற்றிலும் உண்மையான நிலைத்த உரை யாகும்; பொற்சபை சிற்சபை ஆகிய அனுபவ.