பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 இற்பிறப் பென்ப தொன்றும் இரும்பொறை என்பதொன்றும் கற்பெனும் பெயர தொன்றும் களிதடம் புரியக்கண்டேன்.' (29). இத்தகைய வியப்பான-புதுமையான கருத்து வெளிப் பாடு அனுமனுடையதா? கம்பனுடையதா? நான் அங்கே அண்ணல் காந்தியடிகளைக் காணவில்லை-ஒரு மனித தெய்வத்தைக் கண்டேன்'- என்று சொன்னால் எப்படியோ. அப்படி இருக்கிறதல்லவா இந்தக் கற்பனை! சீதை இலங்கையில் தவநிலை மேற்கொண்டிருக் கிறாள் இங்கே, சீதை தவம் செய்கிறாள் என்று கூறாமல், தவம் என்கிற ஒன்று, சீதையை அடையத்தான் தவம் செய்து அவளை அடைந்துள்ளதாம் எனக் கம்பர் கூறு கிறார்: 'தவம் செய்த தவமாம் தையல்' (3 ) என்பது பாடல் பகுதி. ஒரு நல்ல பாம்பு நஞ்சுடையது எனில், எல்லா நல்ல பாம்புகளுமே நஞ்சுடையன என்பது பொருள். ஒர் ஆ (பசு) பால் தரும் எனின், எல்லா ஆக்களுமே பால் தரும் என்பது கருத்து. ஒரு மனிதன் கொடியவனாயிருப்பின், அக்கொடு மையில் மக்களினம் முழுமைக்கும் பங்கு உண்டு. ஒரு பெண் மிகவும் உயர்ந்த பெருமை உடையவளாயிருப்பின், அப்பெருமையில் பெண்ணினம் முழுவதற்கும்பங்கு உண்டு. இந்த அடிப்படை விதியின் படி, சீதையின் பெருமையில் மற்ற பெண்கட்கும் பங்கு உண்டு. சீதையின் கற்புப் பெரு, மையால் மனிதப் பெண்கள் உயர்வடைந்ததல்லாமல், பெண் தெய்வங்களும் உயர்வு பெற்றனராம். அதாவது, இந்திராணி முதலிய தேவமாதரும் பெருமை பெற்றனர்; சிவனது இடப்பாகத்தில் இருந்த உமை அவனது முடிமேல் இடம் பெற்றாளாம். திருமாலின் மார்பில் இருந்த திருமகள் இப்போது அவனுடைய ஆயிரம் முடிகளின் மேல் இடம் பெற்றாளாம்.