பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. திருக்குறள் ஆட்சி கம்பர் சுந்தர காண்டத்தில் சில திருக்குறள் கருத்து களையும்- பகுதிகளையும் எடுத்தாண்டுள்ளார். அவை வருக!ட மண்டோதரி உறங்குகிறாள். பணிப் பெண்டிர் வா என் றால் வருவதும் போ என்றால் போவதுமாகத் தென்றல் காற்று செயல்படுகிறது. ஒன்றன் பயனை அறிந்த பெரியோர், எவ்வளவு பழகியவராயிருப்பினும் ஒருவரிடம் பண்பல்ல செயல்களைச் செய்ய மாட்டார்கள். அதுபோல் தென்றல் எவ்வளவு பழகியதாயிருப்பினும் அதனை இவ்வாறு நடத்தலாகாது. ஊர் தேடு படலம்: 'விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும் கீழ்மையர் வெகுள்வுற்றால், பிழைகொல் நன்மைகொல் பெறுவதென்று ஐயுறு பீழையால், பெருந்தென்றல் உழையர் கூவப் புக்கு ஏகு எனப்பெயர்வதோர் ஊசலின் உளதாகும். பழையம் யாமெனப் பணிபல செய்வரோ பருனிதர் பயன் ஒர்வார்' (196) "பழையம் எனக் கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும்” (700) என்னும் குறள் மேற்கண்ட பாடலில் எடுத்தாளப் பட்டுள்ளது. சு-7