பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அசோக வனத்தில் இருந்த சீதை கற்பு கெடாமல் காக்கப்படுவதைக் கண்டு அனுமன் வியக்கிறான்: சீதையை அறம் காத்ததோ- அவள் தந்தை சனகன் செய்த நல்வினை காத்ததோ அவளது கற்பு காத்ததோ அருமை அருமை! இது பற்றி எம்மனோர் சொல்லி முடியுமோ! 'தருமமே காத்ததோ! சனகன் நல்வினைக் கருமம் காத்ததோ! கற்பின் காவலோ! அருமையே அருமையே! யாரிது ஆற்றுவார்! ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கற்பாலதோ! (71) இப்பாடலில் உள்ள கற்பின் காவலோ' என்ற பகுதி மிகவும் இன்றியமையாதது. சிறையில் இட்டுக் கற்பைக் காப்பாற்றி விட முடியாது: மகளிர் விரும்பினால் சிறைக் காப்பை மீறியும் எதுவும் செய்ய முயலலாம். எனவே, மகளிரின் கற்பு காக்கும் தற்காப்பே தலையாயதுஎன்னும் கருத்துடைய, 'சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை” (57) என்னும் குறள் கருத்து அடங்கியுள்ளது. - சீதை அசோகவனத்தில் இருந்தபோது பலவாறு எண்ணி வருந்துகிறாள்: கவரி மாவைப் போன்ற மானம் உடைய உயர் மகளிரின் முன், கணவனைப் பிரிந்து கள்வர் ஊரிலே இருந்தவள் என்னும் ஏச்சுடன் எவ்வாறு நிற்பேன் -என்று வருந்துகிறாள் : 'வருந்தலில் மானம்மா அனைய மாட்சியர் பெருந்தவ மடந்தையர் முன்பு பேதையேன் கருந்தனி முகிலினைப் பிரிந்து கள்வன் ஊர் இருந்தவள் இவளென ஏச நிற்பெனோ? - (உருக்காட்டு படலம்-19) இந்தப் பாடலில், 'மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்' (969)