பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 என்னும் குறள் மறைந்து கொண்டுள்ளது. கவரிமா என்பது, மேலே மயிர்களை உடைய யாக்' என்று பெயர் வழங்கப்படுகின்ற ஒருவகை விலங்காகும். இந்தியாவின் வட எல்லையில்.ட லடாக்' என்னும் பகுதியில் யாக்” என்னும் பெரிய விலங்கு உள்ளது. கவரிமாமயிர் நீப்பின் வாழாதது போல், சீதை கற்பு நீப்பின் வாழாள்- என்பது கருத்து. - இங்கே மானம் என்பது பற்றிச் சிறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. கிடைத்திருக்கும் நூல்களுள் மிகவும் பழையதாகிய தொல்காப்பியத்தில், மானம் என்பது குற்றம் என்னும் பொருளில் பல இடங்களில் ஆளப் பட்டுள்ளது. - 'தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும் மெய்ந்நிலை கிளப்பின் மானம் இல்லை” (47) 'ஆனிடை வரினும் மானம் இல்லை' (199) 'வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை' (230, 246) 'ஆடுஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும் இன் இடை வரினும் மானம் இல்லை' (271) 'மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை' (323) 'முதனிலை நீடினும் மானம் இல்லை' (465) இவை தொல்காப்பியத்தில் உள. இவற்றில் உள்ள மானம் என்னும் சொல்லுக்குக் குற்றம் என்பது பொருளாகும். தொல்காப்பியம்- பொருளதிகாரம்- அகத்திணை யியல் - 44 ஆம் நூற்பாவின் இடையில் உள்ள 'புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும்' (44-14) என்னும் பகுதிக்கு இளம்பூரணர் பின்வருமாறு உரை எழுதியுள்ளார். 'பிரிந்ததனான் வரும் புகழும் பிரியாமையான் வரும் குற்றமும் குறித்துத் தலைமகளையான் வருந்துணையும்