பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 இவ்வாறு இணைத்ததில், தி ருக்குறள், நாலடியார், பழமொழி, திரிகடுகம், ஏலாதி, இனியவை நாற்பது முதலிய நூல்கட்குப் பங்கு உண்டு. இந்நூல்களுள் சிலவற்றின் சில பாடல்களில், மானம் என்பது, அப்படியும் இப்படியுமாகக் குழப்பம் தரும் நிலையிலும் ஆளப்பட்டுள்ளது. மானம் என்பதற்கு வள்ளுவர் அகராதியில், இளி வரின் வாழாத மானம’ (970) எனத் தெளிவாகப் பொருள் கூறப்பட்டுள்ளது. இளிவரின் என்பது, வடதுருவம்; வாழாத மானம் என்பது தென் துருவம். எனவே. இருதுருவங் கட்கும் இடையே பாலம் அமைத்தவை பதினென்கீழ்க் கணக்கு நூல்கள் சிலவாகும். திருக்குறளுக்கு அதில் பெரும் பங்கு உண்டு. நாள் ஆக-ஆக, குற்றம் என்னும் பொரு :ளாகிய வடதுருவம், இணைத்த பாலத்தின் வழியாகச் சென்று, பெருமை என்னும் தென் துருவத்தைப் பிற் காலத்தில் அடைந்து விட்டது. இனிக் கம்பரிடம் வருவோம் 'வருந்தலில் மானம் மாஅனைய மாட்சியர்' என்னும் பகுதியில் உள்ள வருந்தலில்’ என்பதை வருந்தல் இல் எனப் பிரித்து, ஏதேதோ சொற்களை வருவிக் து 'வருந்துதல் இல்லாத என்று அதற்குப் பொருள் கூறிச் சில உரையாசிரியர்கள் இடர்ப்பட்டுள்ளனர். குறைவு நேரின் வருந்துவதிலே மான மா போன்ற மாட்சியர் என்று பொருள் கூறலே பொருந்தும். வருந்தலில் என்றால், 'வருந்துவதிலே’ என்று பொருளாம் கீழோர் குறைவு நேரினும் வருந்துவது இல்லை என்பது நினைவு கூரத் தக்கது: இங்கே இதுகாறும் இதுபற்றி இவ்வளவு விரிவாகக் கூறியது, கம்பரும் இரு துருவங்களையும் இணைக்கும் பால மாக இருந்திருக்கிறார் என்பதை அறிவிப்பதற்கேயாம். வருத்துவதிலே மானமா அனைய மகளிர் முன் என் நிலை என்னாவது என்று வருந்தும் சீதையும் வருந்துவதைத் தொடர்ந்து உயிர் விடத் துணிந்தாள் அல்லவா?