பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 11 விருந்து அருந்திச் செல்லும்படி வேண்டிய மைந்நாகத் திடம் அனுமன் கூறுகிறான்: "உடலுக்கு எலும்பு வலிமை தருவதுபோல் வேறு உண்டோ? பூசனைக்கு (உபசரிப் பதற்கு) அன்பினும் சிறந்த தொன்று உண்டோ?' "என் பின் சிறந்தாயதோர் ஊற்றம் உண்டு என்னல் ஆமோ? அன்பின் சிறந்தாய தோர் பூசனை யார்கண் உண்டோ?’’ (கடல் தாவு படலம்-50) என்பும் அன்பும் இணைத்துப் பேசப்பட்டுள்ள இவ் விடத்தே பின் வரும் குறள் நினைவிற்கு வருகிறது. 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார், என்பும் உரியர் பிறர்க்கு' (72) என்பு = எலும்பு, என்பும் என்னும் உம்மை, எலும்பின் இன்றியமையாச் (முக்கியமான) சிறப்பினை உணர்த்தும் உயர்வு சிறப்பு உண்மையாகும். கம்பர் பாடலில் உள்ள 'என் பின் சிறந்தாயதோர் ஊற்றம் உண்டு என்னல் ஆமோ' என்னும் நீண்ட தொடர், குறளில் உள்ள என்பும்’ என்னும் சொல்லின் இறுதியில் உள்ள உம்? என்பதில் அடங்கியுள்ள அருமை வியந்து நயத்தற்கு உரியது. உலகியலில், அவன் முதுகு எலும்பு (Back Boan) இல்லாதவன்' என்றும், அந்த நிறுவனத்திற்கே அவர் தாம் முதுகெலும்பு' என்றும் கூறப்படும் வழக்காறுகள் ஈண்டு