பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தரல், பாடல்களிலே சில அடிகளும் சில தொடர்களும் சில சொற்களும் பதிப்புக்குப் பதிப்பு வேறுபட்டிருத்தல், பாடல் களின் எண்ணிக்கையில் ஏற்றத் தாழ்வு உள்ளமை, சில பதிப்புகளில் இல்லாத பாடல்கள் வேறு பதிப்புகளில் உள்ளமை-அதாவது-சில பதிப்புகளில் உள்ள பாடல்கள் வேறு பதிப்புகளில் இல்லாமை முதலிய பல வேறுபாடுகள் கம்பராமாயணப் பதிப்புகளில் உள்ளன. சுந்தர காண்ட மும் இதற்கு விதி விலக்கு அன்று. கம்ப ராமாயணம் பதினாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை உடைமையால், இடத்திற்கு இடம்-ஆளுக்கு ஆள் சுவடிகளைப் பெயர்த்தெழுதும் போது இவ்வாறெல் லாம் வேறுபடுவதற்கு வாய்ப்பு உண்டு. இடைச் செருக லாகச் சில பாடல்கள் சிலரால் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் ஒரு கருத்துக் கூறப்படுகிறது. இருநூற்றுக்கும் மேற்பட்ட சுவடிகள் இருத்தலின், சுவடிக்குச் சுவடி குழப்பம் ஏற்பட் டுள்ளது. இவை யெல்லாம், கம்பராமாயணம் ஒரு காலத்தில் நாடு முழுவதும் பரவலாகப் பயிலப்பட்டது என்னும் உண் மையை அறிவிக்கின்றன. சுந்தர காண்டப் பயிற்சி : கருடாழ்வாரைப் பெரிய திருவடி என்றும், அனுமனைச் சிறிய திருவடி என்றும் வழங்குவது மரபு. அனுமனுக்குப் பல ஊர்களிலும் கோயில்கள் உள. இராமாயணக் கதை மாந்தருள், இராமன்-சீதைக்கு அடுத்தபடியாக அனு மனுக்கே சிறப்புப் பெருமையும் தெய்வத்தன்மையும் இருப்ப தாக நம்பி மக்கள் அனுமனை வழிபடுகின்றனர். ஊரில் எளிய ஒரு குரங்கு இறந்து விடினும், ஊரார் அதனைத் தெய்வப் பெருமையுடன் நல்லடக்கம் செய்வர். அது செய்த அட்டூழியங்களை யெல்லாம் இறந்த பின் மறந்து அதற்குத் தெய்வத் தன்மை ஏற்றி விடுகின்றனர்.