பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 அனுமன் ஆற்றிய மறச் செயலைக் கயிலைச் சிவனும் பார்த்தானாம். அகன் கயிலையில் தொலைவு இலோனும் பார்த்தான்' (73): சிவன் தொலைவு அழிவு இல்லாதவன் எனக் கம்பர் கூறி யுள்ளார். உண்மைதான், அவர் எந்தப் பிறவியும் எடுக்கவோ-இறக்கவோ இல்லை தானே! இலங்கையில் உள்ளவர்கட்குத் தேவர்கள் எல்லாரும் ஏவல் செய்கினறனராம். தெய்வ இனத்தவர் மூவருள் இருவர் மட்டும் ஏவல் செய்யவில்லையாம். ‘'தேவர் என்பவர் யாரும் இத்திருநகர் வீரர்க்கு ஏவல் செய்பவர்; செய்கிலாதவர் எவர் என்னின், மூவர் தம்முளும் இருவர்...' (ஊர் தேடு படலம்-10). நான்முகன், திருமால், சிவன் என்னும் மூவருள்-மும் மூர்த்திகளுள், திருமால் இராமராக வந்து விட்டதால், மற்ற இருவரும் மூவருள் இருவர் எனக் குறிப்பிட்டுள் ளனர். இலங்கையை இரவில் இருள் கவ்வியதற்குச் சிவன் தொடர்பான ஓர் உவமை கூறுகிறார் கம்பர். முப்பிரி வுடைய குலப் படையையுடைய சிவன், தாருகாவனத்து. அந்தணர்கள் வேள் வித் தீயினின்றும் வந்த யானையைத் தன் மேல் அனுப்பிய போது உரித்த கரிய அந்த யானைத். தோலால் உறை போர்த்தது போல் இருள் கவ்வியதாம். 'கரித்த மூன்று எயிலுடைக் கணிச்சி வானவன், எரித்தலை அந்தணர் இழைத்த யானையை உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஒர் உறை புரித்தன னாம்எனப் பொலியும் பொற்பதே' (42). அனுமன் இலங்கையினுள் புக முயன்றபோது, நகர்க் காவல் தெய்வமாகிய இலங்கைமாதேவி, அனுமனைத்