பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 'இவனை இன்துணை உடையபோர் இராவணன் என்னே புவனம் மூன்றையும் வென்றது ஓர்பொருள்எனப் புகறல்! சிவனை நான்முகத் தொருவனைத் திருநெடு மாலாம் அவனை அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவோ' (140) "இங்கே, திருநெடுமாலாம் அவனை' என இராமனை அனுமன் குறிப்பிட்டதாகக் கம்பர் கூறியிருப்பாரோ? எது வாயினும் சரியே! . மேரு மலையை வில்லாக வளைத்த சிவனது கயிலை மலையை எடுத்த இராவணனின் தோளைத் தழுவிய இயக்க மகளிரின் மார்பகத்தில் தோளில் இருந்த சாந்து படிய, அம்மகளிர் மகிழ்ந்து குலாவினராம்: 'கவ்வு தீக்கணை மேருவைக் கால்வளைத்து எவ்வினான் மலை ஏந்திய ஏந்தல் தோள் வவ்வு சாந்து தம்மா முலை வவ்விய . செவ்வி கண்டு குலாவுகின் றார்சிலர்”- (175). சிவனது கயிலை மலையை ஏந்திய இராவணன், சிறந்த ஆண் மகனைக் குறிக்கும் ஏந்தல்' என்னும் சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளான். ஏந்திய ஏந்தல்' என்னும் தொடராட்சி நயமாயுள்ளது. * நடனம் ஆடிய சிவனது புகழை, அவனது கயிலை மலையின் கீழ் அகப்பட்டுக் கொண்ட பொழுது, ஒரு தலையைக் கொய்து கையாகிய நரம்பை மீட்டி வீணை யாக்கிப் பாடிய இராவணனது புகழைப் பெண்டிர் சிலர் பாடினர்.