பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 'கூடி நான்குயர் வேலையும் கோக்க நின்று ஆடினான் புகழ், அம்கை நரம்பினால் நாடி நால்பெரும் பண்ணும் நயப்புறப் பாடினான் புகழ் பாடுகின் றார்சிலர்' (176) இங்கேயும் சிவன் குறிப்பிடப்பட்டுள்ளார். மீண்டும் மலையெடுத்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. குழந்தை மதியாகிய ஒற்றைப் பிறை நிலவை முடியிலே சூடிய சிவனது மலையை எடுத்த தோள் வலிமையுடையவனாம் இராவணன். "குழந்தை வெண்மதிக் குடுமியன் நெடுவர்ை குலுக்கிய குலத் தோளை...' (207) அடுத்து,-சிவனது மழுப்படையும், திருமாலின் நேமியும் (சக்கரப் படையும்), இந்திரனின் வச்சிரப் படை யும் ஒரு பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றின் வாய்மை துடைத்த மார்பனாம் இராவணன்: 'முழு வானவராய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல்தேவர் மழுவாள், நேமி, குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை'- (213) அனுமன் தானே இராவணனை முடிக்க எண்ணினான். பிறகு உணர்வு தெளிந்து, நஞ்சுண்ட சிவன் போன்ற மிக்க ஆற்றல் உடையவர்களாயினும் அமைதியுடன் செயலாற்ற வேண்டும்- காலம் பார்க்க வேண்டும் என்று எண்ணு கின்றான். 'ஆலம் பார்த்து உண்டவன் போல ஆற்றல் அமைந்துளர் எனினும், சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்யவோ? (220)