பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 இங்கேயும், எனினும் என்பதில் உள்ள உம்மை, சிவனது உயர்வை அறிவிக்கும் உயர்வு சிறப்பு உம்மை யாகும். s - -> இராமன் முரித்த வில், கங்கையணிந்த சிவன் தந்த வில். அதை இராமன் முரித்ததை எண்ணிச் சீதை. மெலிகின்றாள்: தேங்கு கங்கைத் திருமுடிச் செங்கணான் வாங்கு கோல வடவரை வார்சிலை’ (காட்சிப் படலம்-21). ஈசனே (சிவனே)யாயினும் அஞ்சாத-பெருமையை விட்டுக் கொடுக்காத மனத்தினனாம் இராவணன்: 'ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை வாசிப்பாடு அழியாத மனத்தினான்’- (98) 'ஈசற்கு ஆயினும் என்பதில் உள்ள உம்மையும் சிவனது உயர்வை அறிவிக்கும் உயர்வு சிறப்பு உம்மை யாகும். ஈசன் என்பது சிவனைக் குறிக்கும். ஈசன், ஈசுரன் என்ற ஈறுகளில் முடியும் சிவன் பெயர்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன. மண்டல புருடர் என்பார் தமது சூடாமணி நிகண்டின்- பதினோராம் தொகுதியின் முதல் பாடலில், 'பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்' எனக் கடவுளரின் பட்டியல் தரும்போது, சிவனை ஈசன்’ என்னும் பெயராலேயே குறிப்பிட்டுள்ளார். சிவனுக்கு. உள்ள முதன்மையையும் (Seniority) அவர் விட்டாரிலர்: இத்தனைக்கும் அவர் ஒரு சமண சமயத்தவர். சீதை இராவணனைக் கடிந்து பேசுகின்றாள்: நீ. அன்று சடாயு என்னும் பறவைக்குத் தோற்றதாகவே எண்ண வேண்டும். கங்கை நீர் தாங்கிய முடியையுடைய சிவன் தந்த வாள் உன்னிடம் இருந்ததால் நீ சடாயுவை,