பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இந்த அடிப்படையில், இராமாயணம் படிப்பவர்களுள், முதலில் சுந்தர காண்டத்தைப் படிப்பவர்கள் உளர். எனவே, இராமாயணக் காண்டங்களுள் சுந்தர காண்டம் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கம்பரும் வால்மீகியும்: வால்மீகி இராமாயணத்தின் வழி நூலே கம்பராமா யணம். எனினும், கம்பர் வால்மீகியினும் சிற்சில வேறு பாடுகள் கொண்டுள்ளார். வால்மீகி அடிப்படையையே ஆட்டங்காணச் செய்துள்ளார்; கம்பர் அதனைச் சரி செய் துள்ளார். அதாவது-வால்மீகி இராமனையும் சீதையை யும் மக்களாகவே கொண்டுள்ளார். கம்பரோ இருவரையும் திருமால்டதிருமகள் ஆகியோரின் தெய்வப் பிறவிகளாகக் கொண்டுள்ளார். அதற்கேற்பக் கதை அமைத்துக்கொண்டு போகிறார். ஒன்றே ஒன்று பார்ப்போமே! இராவணன் சீதையை உடலைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு பேர்னதாக வால்மீகி வம்பு செய்துள்ளார். கம்பரோ, சீதை இருந்த குடிலை அகழ்ந்து, சீதையைத் தீண்டாமல் குடிலோடு துரக்கிக்கொண்டு சென்றதாகக் கூறித் தமிழ் கற்றவர் களை ஏமாற்றியுள்ளார். கதையின் இடையிடையேயும் இருவர்க்கும் சிறு சிறு மாறுதல் உண்டு. அவர் சொன்னதை இவர் விட்டிருப்பார்அவர் சொல்லாததை இவர் சொல்லியிருப்பார். புனைவு களில் இருவரிடையேயும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். இனிச் சுந்தர காண்டத்திற்கு வருவோம். தன்னிடம் வந்து கெஞ்சிய இராவணனுக்கும் தனக்கும் இடையே ஒரு துரும்பைக் கிள்ளி வைத்துச் சீதை பேசிய தாகவும், நீ இணங்காவிடின் உன்னை அடுக்களைக்கு (சமையலுக்கு) அனுப்பி வெட்டி (சூப்பு-குருமா) உணவுப் பொருளாக்கி உண்போம் என்று சீதையிடம் இராவணன் கூறியதாகவும், சீதையிடம் கெஞ்ச வேண்டாம் என