பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 னுடைய தூதன். அந்த இராமன் எப்பேர்ப்பட்டவன் என்று. சொல்வேன். (சிவனுக்கு உரிய) சூலப் படையும், (திருமாலுக்கு உரிய) ஆழியையும் (சக்கரம்) வளையையும் (சங்கு) (நான்முகனுக்கு உரிய) கமண்டலத்தையும் விட்டு அவற்றிற்குப் பதிலாகக் கையில் வில் ஏந்திக் கொண்டு, இருப்பிடங்களாகிய (திருமாலுக்கு உரிய) ஆல் இலையையும் (நான்முகனுக்கு உரிய) தாமரை மலரையும், (சிவனுக்கு உரிய) வெள்ளிக் கயிலை மலையையும் துறந்து அயோத்தி யில் வந்து தோன்றினான். அவன் தோற்றமும் வாழ்க்கை யும் அழிவும் இல்லாதவன் - காலக் கணக்கைக் கடந்தவன். என்று கூறுகிறான்: 'மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன்; கையில் ஏந்தி, குலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்”(பிணி வீட்டுப் படலம்-75): இவ்வாறு அனுமன் சொன்னானோ-இல்லையோ! அனுமன் சொன்னதாகக் கம்பர் கூறியுள்ளார். கம்பரின் சமயப் பொதுமைக் கொள்கைக்கு இதனினும் வேறு சான்று வேண்டுமோ?