பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சீதையின் பண்பு விளக்கம் சீதை மிகவும், உயரிய பெண்மையும் கற்பும் உடைய' வளாகத் திகழ்ந்தாள். சீதையின் குணநலன்கள் சிலவற்றை இவண் காண்பாம். 1. உறுதியான கற்பு உடைமை. 2. இராவணனுக்கு ஆட்படாமை. அவனுக்குச் சினந்தும் நயந்தும் அறிவுரை கூறினமை. 3. இராவணன் தன்னைத் தொட்டால் வெடித்து விடுவான் என்ற அளவு தெய்வத்தன்மை உடைமை. 4. உலகம் முழுவதையும் சொல்லினால் சுடும் ஆற்றல் {P_. 6O) 1 — 6O) LD. 5. அனுமன் தன் தோள் மேல் ஏறிக் கொள்ளச் சொன்னபோது ஒத்துக் கொள்ளாமை. 6. திரிசடையுடன் இனிய நட்பு கொண்டிருந்தமை. 7. அனுமனை நல்லன் எனப் புரிந்து கொண்ட திறமை. 8. கற்பு கெட நேரும் போல் தேரிந்த போது, தற்கொலைசெய்து கொள்ள முயன்றமை, 9. அனுமனிடம், இராமருக்குச் சொல்லும்படியாக உருக்கமாகச் செய்திகள் கூறினமை.