பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 10. இராமர் வேறு மாதரை விரும்பாதிருக்க வேண்டும் என எண்ணிய பற்று. 11. இப் பிறவியில் தவறினால் மறு பிறவியிலாயினும் இராமரை அடைய வேண்டும் என விரும்பியமை. 12. மாமியார் முதலானவர்க்கு வணக்கமும் மற்று ளார்க்கு வாழ்ததும் தெரிவிக்க அனுமனை வேண்டினமை. 13 தான் இல்லாமல், கணவர் எங்ங்ணம் நல்ல உணவு உண்பார்? விருந்தினர் வந்தபோது என்ன செய்வார்? என வருந்தினமை. 14. இலக்குவன் சொல் கேளாத தனது தவறுக்கு வருந்தினமை. 15. அனுமனுக்கு உற்ற துயரையறிந்து தாயன்பு கொண்டு வருந்தி, அவனது வாளைச் சுடாதே எனத் தன் கற்பின் மேல் ஆணையிட்டுத் தீக்கடவுளை வேண்டிக் கொண்டமை. 16. சீதை பிறந்த குடிக்கும் புக்ககுடிக்கும் பெருமை தந்தாள். இதைப்பற்றி அனுமன் இராமனிடம், உன் குலப் பெருமையை உனக்கு உரியதாக்கியும், தன் குலப் பெருமை யைத் தனக்கு உரியதாக்கியும், அரக்கர் குலம் எமனிடம் போவதற் காயவற்றைப் புரிந்தும், தேவர் குலத்தை வாழச் செய்தும், என் (வானரர்) குலப் பெருமை எனக்கு உரிய தாக்கியும் தூய்மையுள்ளள் - என்று கூறினான்: "உன்குலம் உன்னதாக்கி உயர் புகழுக்கு ஒருத்தி ஆய தன்குலம் தன்ன தாக்கித் தன்னை இத் தனிமை செய்தான்