பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 வன்குலம் கூற்றுக்கு ஈந்து வானவர் குலத்தை வாழ்வித்து என் குலம் எனக்குத் தந்தாள்; என் இனிச் செய்வது எம்மோய்!' (திருவடி தொழுத படலம்-28): 17. முதல் முதல் கண்ட அனுமனால் கற்பு பாராட்டப் படுதல்:-காஞ்சிப்படலம் 'காசுண்ட கூந்தலால் கற்பும் காதலும் ஏசுண்ட தில்லையால்; அறத்திற்கு ஈறு உண்டோ? 18. பெண்மையின் இயல்புக்கு ஏற்ப, அனுமன் பேருருவம் எடுத்த போது, அஞ்சினவள் போல், உருவை அடக்குக என வேண்டினமை. • 19. தான் தூக்கிக் கொண்டு சென்று இராமரிடம் விடுவதாகக் கூறிய அனுமனைப் பதமாக-நயமாக மறுத்தமை. ‘அனும உனக்கு இது இயலாத செயல் அன்று; உன் வலிமைக்கு ஏற்றதே! உன்னால் செய்ய முடியும், ஆனால், இது சரியன்று என எனது பெரிய பேதைமை யான சிறிய பெண்மதியால் உணர்கிறேன்'- என்றனள். 'அரிய தன்று நின் ஆற்றலுக் கேற்றதே தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே உரிய தன் றென ஓர்கின்ற துண்டு அது என் பெரிய பேதைமைச் சின் மதிப் பெண்மையால் (சூடாமணிப் படலம்-12). இங்கே சீதை, தன்னைப் பெரிய பேதமை உடைய வளாகவும் சின் மதி உடையவளாகவும் கூறிக் கொண்ட அடக்கம் குறிப்பிடத்தக்கது. 19. தான் அனுமனுடன் சென்றால், தன் கணவரின் ஆற்றல் குறைவுபடும் எனக் கூறல்.