பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.8 அனுமனின் பண்பு விளக்கம் சுந்தர காண்டத்தின் முதன்மை உறுப்பினனாகிய அனுமனின் சிறப்பு இயல்புகளை (Character) இப்பகுதியில் விளக்கலாம்: 1. ஆற்றல் அனுமன் மயேந்திர மலையிலிருந்து இலங்கைக்குத் தாவித் தன்னந் தனியனாய் அரக்கர்களை அழித்தமை கொண்டு அவனது ஆற்றலைப் பொதுவாக அறியலாம். சிறப்பாக அனுமன் புரிந்த போர்கள் வருமாறு: (1) சுரசை என்பவள் நல்லவள்-தூயவள். ஒரு கெடு மொழியால் (சாபத்தால்) அரக்கியானாள். அனுமன் இலங்கைக்குத் தாவிக்கொண்டிருந்தபோது, அனுமனை உண்பேன் என்றாள். அதற்கு அனுமன், இராமர் இட்ட பணியை முடித்து யான் திரும்பும் போது நீ என்னை உண்ணலாம் என நையாண்டி செய்து சிரித்தான். அவள் உண்ணவாய் திறந்தாள். அவள் உண்ண முடியாத படி அனுமன் பெரிய உருவம் எடுத்தான். பின்பு அவள் பணிந்து தாய்போல் ஆனாள். (2) அங்கார தாரை என்னும் அரக்கி அனுமனை உண்ணவாய் திறந்தாள்-அனுமன் அவள் வாய்க்குள் புகுந்து உடலைக் கிழித்துக் கொன்று வெளியேறிச் சென்றான்.