பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 3. அனுமன் முதல்முதல் இலங்கைக்குள் புகுந்த போது, இலங்கையின் காவல் தெய்வமாகிய இலங்கை மாதேவி அனுமனைத் தடுத்துப் பொருதாள்-அனுமனை அறைந்தாள். பின் அனுமன் அவளை வன்மையாய் அறைந்து தரையில் வீழத்தினான். பின்னர் அவள் நல்ல வடிவம் எடுத்து நான் முகன் தன்னைப் படைத்துக் காவலாய் வைத்ததாகவும் ஒரு குரங்கால் இது நேரும் என்று கூறியதாகவும் சொல்லி அகன்றாள். 4. அனுமன் அசோகவனத்தை அழித்தான். ஆங்கிருந்த அனைவரும் அஞ்சி ஓடினர். எதிர்த்தவரை அனுமன் வென்றான். 5. வலிமை மிக்க சிங்கரர்கள் அனுமனோடு பொருது புண் உண்டாக்கினர். அனுமன் ஒரு மரத்தைப் பிடுங்கி அதால் அடித்து அனைவரையும் கொன்றான். 6 அரக்கர்களின் தானைத் தலைவனாகிய சம்பு மாலி என்பவன் அணிவகுத்து அனு மனுடன் போர் புரிந்தான். அவன் விட்ட படைகளையெல்லாம் அனுமன் இரும்புத் தடியால் தடுத்து அவனைக் கொன்றான். 7. படைத் தலைவர்கள் ஐவர் இராவணனை வேண்டிப் போருக்குப் பெரும்படையுடன் வந்து அனுமனுடன் பொருதர்ை. அனுமன் பேருருவம் கொண்டான். அரக்க மறவர்களையெல்லாம் கொன்றான். படைத் தலைவர் ஐவருள் ஒருவனை இரும்புத் தடியால் அடித்துக் கொன்றான். இரண்டாமவன் அனுமனால் தேரோடு வானில் எறியப்பட்டுக் கீழே விழுந்து மிதிபட்டு இறந்தான். வேறு இருவரையும் தேரோடு விண்ணில் வீசினன் அனுமன். அவர்கள் மண்ணிலே விழுந்து மற்போர் புரிந்தனர். அனுமன் அவர்களை வாலால் இறுக்கிச்சுற்றிக் கொன்றான். இறுதியாக ஐந்தாமவனை அனுமன் தலையில் அடித்துக் கொன்றான். சு-9