பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 2 அனுமன் தன்னை விழுங்க வந்த சுரசை என்பாளை வென்று அவளுக்கு வாழ்த்துக் கூறிச் சென்றானாம்: பொன் மேனியனும் நெடிது ஆசி புனைந்து போனான்"- (60, 3. இலங்கை மாதேவி தன்னைத் தாக்கியபோது, அவள் பெண் என்று இரங்கி, அவளைக் கொல்லாமல் ஓர் அறை அறைந்து கீழே வீழ்த்தியதோடு விட்டு விட்டான்: “அடியா முன்னம் அம்கை அனைத்தும் ஒரு கையால் பிடியா, என்னே பெண் இவள், சொல்லின் பிழை என்னா ஒடியா நெஞ்சத்து ஒர் அடி கொண்டான்; உயிரோடும் இடியே றுண்ட மால் வரைபோல் மண்ணிடை வீழ்ந்தாள்.' (ஊர்தேடு படலம்-89), 4. சம்புமாலி என்னும் படைத் தலைவன் பல்வகைப் படைகளுடன் வந்து அனுமனோடு பொருது எல்லாப் படைகளையும் இழந்து தனித்து நின்றான். அவன் நிலையைக் கண்ட அனுமன், அவனை நோக்கி, 'எளியவரின் உயிரைக் கொல்லுதல் நீதியன்று. உடன் வந்தவரைக் காக்கும் வலிமை உனக்கு இல்லை. எல்லாரை யும் இழந்து தனித்து நிற்கின்றாய். இப்போது சாவதைத் தவிர உன்னால் வேறொனறும் செய்ய இயலாது; எனவே, நீ போய் வா' என்று கூறி அனுப்பினான். 'ஏதி ஒன்றால், தேரும் அஃதால், எளியோர் உயிர் கோடல் நீதி அன்றால், உடன் வந்தாரைக் காக்கும் நிலை இல்லாய்.