பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 சாதி, அன்றேல் பிறிதென் செய்தி? அவர் பின் - தனி நின்றாய் போதி என்றான் பூத்த மரம்போல புண்ணால் பொலிகின்றான்' (சம்பு மாலி வதைப் படலம்-43) 5. இராவணன் உறங்கிக் கொண்டிருந்த பொழுது தான் முதல் முதல் அனுமன் அவனைக் கண்டான்; அப்போது அவனைக் கொல்ல நினைத்தானாம். ஆனால், உறங்குபவனது உயிரைக் கொல்லல் குற்றம் என்று விட்டு விட்டானாம். 'உறங்குகின்றபோது உயிருண்டல் குற்றம் என்று ஒழிந்தேன்' (பிணி வீட்டுப் படலம்-51) 6. இராமனும் சீதையும் படும் துயரை எண்ணி அனுமன் பெரிதும் வருந்தினான். 3. பணிவு 1. இராமன் சீதை முதலியோரிடம் அனுமன் மிகவும் பணிவு கொண்டிருந்தான். சீதையைத் தான் எடுத்துக் கொண்டு செல்ல என்னியபோது, அது கூடாது எனச் சீதை மறுக்க, அனுமன் அதற்குப் பணிந்து செயல் பட்டான். - 2. அனுமனை நேருக்கு நேர் பொருது வெல்ல முடியாமல் போனதால், இந்திரசித்து நான்முகன் தந்த படையை அனுமன் மேல் அனுப்பினான். உடனே அனுமன் 'இது நான்முகன் படை; இதன் ஆணையை நாம் புறக் கணித்து அப்பால் அகலுதல் பொருத்தம் அன்று’ என எண்ணிக் கண்ணை மூடிக்கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு இருந்தான். உடனே, அனுமன் இறந்து விட்டதாக அரக்கர்கள் தப்புக் கணக்கு போட்டனர்.